செவ்வாய், 6 அக்டோபர், 2020

பேணுதலான வாழ்வே பயனுள்ள வாழ்வு


كان فضيل بن عياض رحمه الله يقول: لا خير في فقه لا ورع فيه كما لاخير في صلاة لا خشوع فيها ‘ ولا مال لا جود فيه.
(الكتاب تنبيه المغترين للإمام شعراني صفحة: ١٩٨)

புழைல் இப்னு இயாழ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:

அச்சமில்லாத தொழுகையில் எந்த சிறப்பும் இல்லாதது போன்றும்

தர்மம் கொடுக்காத செல்வத்தில் எந்த சிறப்பும் இல்லாதது போன்றும்

பேணுதல் இல்லாத மார்க்க கல்வியிலும் எந்த சிறப்பும் இல்லை.

(
பேணுதலில் உறுதிமிக்கவர்)
                    
 أن أبا عبد الله الحارث بن اسد المحاسبي  ورث من ابيه سبعين ألف درهم فلم يأخد منه شيئا قيل لأن أباه كان يقول بالقدر فرأى من الورع أن لا يأخد من ميراثه شيئا
ان النبي صلى الله عليه وسلم لايتوارث أهل ملتين شيئا
(الكتاب:  رسالة القشيرية صفحة:  57)
    
அபூ அப்துல்லாஹ் அல்ஹாரிஸ் பின் அல் முஹாசிபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் : தன் தந்தையிடமிருந்து எழுபதாயிரம் திர்ஹம் தொகைக்கு வாரிசாக இருந்தும் அவற்றிலிருந்து ஒரு திர்ஹத்தை கூட அன்னார் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு காரணம் அன்னாரின் தந்தை, விதியை மறுப்பவராக இருந்தார் என்றும், தந்தையின்  சொத்திலிருந்து எதையும் எடுக்காமலிருப்பதே பேணுதல் என்றும் கருதினார்கள் எனக் கூறப்படுகிறது.

قال رسول الله صلى الله عليه وسلم : لايتوارث أهل ملنتين شيئا

இரு வேறு மார்க்கத்தைச் சார்ந்தவர்கள் ஒருவர் மற்றவருக்கு ஒருபோதும் வாரிசாக மாட்டார்கள் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
                    
சட்ட மேதைகளின் பேணுதல்

رهن أحمد بن حنبل سطلا له عند بقال بمكة فلمّا أراد فكاكه أخرج البقال إليه سطلين وقال خذ أيّهما هو لك ،
فقال أحمد أشكل عليّ سطلي فهو لك والدراهم لك،
فقال البقال سطلك هذا، وأنا أردت أن أجرّبك،
فقال:  لا آخذه ومضى وترك السطل عنده
(الكتاب:  رسالة القسيرية صفحة: 214)

அஹமது இப்னு ஹம்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மக்காவிலே உள்ள காய்கறி வியாபாரியிடம் தன்னுடைய செம்பு வாளியை அடமானம் வைத்தார்கள்.

அந்த வாளியை விடுவிக்க அன்னார் நாடிய போது, அந்த வியாபாரி இரண்டு வாளிகளை அவர்களிடத்தில் காண்பித்து உங்களின் வாளி எதுவோ? அதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

அப்போது அஹமது இப்னு ஹம்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் என்னுடைய எது என்று வாளி எனக்கு குழப்பமாகி விட்டது.

எனவே அந்த வாளியையும், இந்த  திர்ஹத்தையும் நீயே வைத்துக் கொள் என்றார்கள்.

உடனே அந்த காய்கறி வியாபாரி இது தான் உங்களின் வாளியாகும்". நான் உங்களை சோதித்து பார்க்க நாடினேன் என்று கூறினார்.

அதற்கு அஹமது இப்னு ஹம்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் நான் அதை எடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டு அந்த வாளியை அவரிடத்திலேயே விட்டு விட்டு சென்று விட்டார்கள்.

ஹதீஸ் கலை வல்லுனர்களின் பேணுதல்

واستأجر النخعي دابة فسقط سوطه من يده فنزل ‘ وربط الدابة ‘ ورجع فأخذ السوط فقيل له: لو حولت الدابة إلى الموضع الذي سقط فيه فأخذته كان اسهل لك فقال إنما إستأجرتها لأمضي هكذا ..لاهكذا.
(الكتاب:  رسالة القشيرية صفحة: 214)

நகயீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஒரு பிராணியை வாடகைக்கு எடுத்தார்கள்.

 
அன்னார் பயணிக்கும் போது அன்னார் கையில் இருந்த சாட்டை கீழே விழுந்து விட்டது.

 
உடனே அன்னார் கீழே இறங்கி வாகனத்தை கட்டிவிட்டு திரும்ப சென்று அந்த சாட்டையை எடுத்து வந்தார்கள்.

அப்போது அன்னாரிடம் நீங்கள் சாட்டை விழுந்த இடத்தை நோக்கி வாகனத்தை திருப்பி சென்று நீங்கள் எடுத்து இருக்கலாமே? அது உங்களுக்கு மிக எளிதாக இருந்திருக்குமே? என்று வினவப்பட்டது.

அதற்கு அன்னார் நான் அந்த வாகனத்தை ஒருமுறை சென்று வர தான் வாடகைக்கு எடுத்தேன். இவ்வாறு இடையில் ஒரு முறை சென்று திரும்பி வருவதற்கும் சேர்த்து வாடகைக்கு எடுக்கவில்லை என்று கூறினார்கள்.

سيّب ابن المبارك دابة قيمتها كثيرة ‘ وصلى صلاة الظهر ‘ فرتعت الدابة في زرع قرية سلطانية فترك ابن المبارك الدابة ولم يركبها
(الكتاب: رسالة القشيرية صفحة: 214)  
      
இப்னு முபாரக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அதிக விலைமதிப்புள்ள பிராணியை அவிழ்த்து விட்டு லுஹர் தொழுகை தொழுதார்கள்.

 
அந்த பிராணி அரசுக்கு சொந்தமான ஒரு நிலத்திலே  மேய்ந்து விட்டது.

ஆகயால் அந்த பிராணியை இப்னு முபாரக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அதில் பயணிக்காமல் அங்கேயே விட்டுவிட்டார்கள்.

சிறிய விஷயங்களிலும் பேணுதல் அவசியமே!

كان ابو صالح حمدون عند صديق له‘ وهو في النزع فمات الرجل فنفث ابو صالح في السراج فقيل له في ذلك فقال:   الى الآن كان الذهن له في السرجة ‘ ومن الآن صار للورثة. اطلبوا ذهنا غيره.

(الكتاب:  رسالة القشيرية صفحة:213)

அபூ சாலிஹ் ஹம்தூன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், உயிர் பிரியும் தருவாயிலே இருந்த தன் நண்பருக்கு அருகே அமர்ந்து இருந்தார்கள். அப்போது அவர் மரணமடைந்த உடன் அருகே இருந்த விளக்கை ஊதி அனைத்து விட்டார்கள்.

அப்போது ஏன் விளக்கை அனைத்தீர்கள்? என்று வினவப்பட்டது.

அதற்கு அன்னார் (பின்வருமாறு) கூறினார்கள் விளக்கிலே உள்ள எண்ணெய்  இதுவரை இவருக்கு சொந்தமாக இருந்தது. இப்போது முதல் அது அவரின் வாரிசுகளுக்கு சொந்தமாக  ஆகிவிட்டது.

எனவே வேறு ஒரு எண்ணெயை தேடிக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள்.

مر عيسى بن مريم عليهما السلام بمقبرة ‘ فنادى رجلا منها فأحياه الله تعالى فقال من أنت؟  فقال كنت حمالا انقل للناس فنقلت لإنسان يوما حطبا‘ فكسرت منه خلالا تخللت به فأنا مطالب به منذ مت
(الكتاب: رسالة القشيرية صفحة:215)

ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஒரு கப்ரை கடந்து சென்றார்கள்.

 
அப்போது அந்த கப்ரிலிருந்த மனிதனை அன்னார் அழைத்தபோது அல்லாஹ் அவருக்கு உயிர் கொடுத்தான்.

அப்போது ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவரிடம் நீ யார்? என்று வினவினார்கள்.

அதற்கு அவர் நான் மக்களுக்காக பொருட்களை எடுத்துச் செல்லும் சுமைத்தூக்கும் தொழிலாளியாக இருந்தேன்.

ஒரு நாள் ஒரு மனிதருக்காக விறகு கட்டை தூக்கிச் சென்றேன். அப்போது அந்த விறகு கட்டிலிருந்து பல் குத்துவதற்காக  ஒரு குச்சியை  உடைத்து விட்டேன். அதற்காக நான் மரணத்ததிலிருந்து விசாரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றேன்என்று கூறினார்.

சிறிய விஷயங்களில் கூட பேணுதலில் அலட்சியம் வேண்டாம்!

خاطت رابعة العدوية شقا في قميصها في ضوء مشعلة سلطان ‘ فقدت قلبها زمانا حتى تذكرت ‘ فشقت قميصها ‘ فوجدت قلبها
(الكتاب:  رسالة القشيرية صفحة: 215)

ராபியத்துல் அதவிய்யா (ரஹிமஹல்லாஹு) அவர்கள் அரசுக்கு சொந்தமான விளக்கின் வெளிச்சத்தில் தன்னுடைய கிழிந்த சட்டையை தைத்தார்கள்.
அதன் காரணமாக பலநாட்கள் உள்ளத்தின் பிரகாசத்தை இழந்தார்கள்.
பிறகு அன்னாருக்கு அது குறித்த காரணம் நினைவுக்கு வந்தவுடன் தான் தைத்த சட்டையை கிழித்து விட்டார்கள்.
அதன் பிறகு இதயத்தின் பிரகாசத்தை பெற்றுக்கொண்டார்கள்.

كان حسان بن ابي سنان لا ينام مضطجعا‘ ولايأكل سمينا‘ ولا يشرب ماء باردا سنين سنة ‘فرئى في المنام بعد موته‘ فقيل له:  ما فعل الله بك؟  فقال خيرا‘ إلا أنِّي محبوس عن الجنة بإبرة استعرتها فلم أردّها
(الكتاب:  رسالة القشيرية  صفحة: 215)

ஹஸ்ஸான் இப்னு அபூ ஸினான் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பல வருடங்கள்  உறங்கும் போது மல்லாந்து படுக்காதவராகவும், தரமான உணவை உண்ணாதவராகும், குளிர்ந்த நீரைக் கூட அருந்தாதவராகவும் இருந்தார்கள்.

அன்னார் மரணத்திற்கு பின்பு கணவிலே பார்க்கப்பட்டார்கள். அப்போது அன்னாரிடம் அல்லாஹ் உங்களிடம் எவ்வாறு நடந்து கொண்டான்? என்று வினவப்பட்டது.

அதற்கு ஹஸ்ஸான் இப்னு அபூ ஸினான் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் நல்லவிதமாக நடந்துக் கொண்டான். இருந்தபோதிலும்  ஒரு மனிதரிடம் ஊசியை நான் இரவலாக பெற்றேன். ஆனால் அதை நான் திரும்ப ஒப்படைக்கவில்லை. அதன் காரணமாக சுவனத்தை விட்டும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளேன்என்று கூறினார்கள்.

كان لعبد الواحد بن زيد غلام خدمه سنين‘ وتعبد أربعين سنة وكان في ابتداء أمره كيالا ‘ فلمّا مات رئي في المنام ‘ فقيل له: ما فعل الله بك؟ فقال: خيرا غير أنّي محبوس عن الجنة ‘ وقد أخرج عليّ من غبار القفيز الذي اكتلته أربعين قفيزا
(الكتاب:  رسالة القشيرية صفحة:  215)

அப்துல் வாஹித் இப்னு ஜைது (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கு ஒரு அடிமை இருந்தார். மேலும் அவர் ஆண்டுகள் அன்னாருக்கு பணிவிடை செய்தார். நாற்பது ஆண்டுகள் அவர் வணக்கவழிபாடு செய்தார். அந்த அடிமை ஆரம்பகாலத்திலே தாணியங்களை அளந்து கொடுக்கும் தொழிலாளியாக இருந்தார்.

அந்த அடிமை மரணித்த பிறகு அவரை கனவிலே பார்க்கப்பட்டது. அவரிடம் அல்லாஹ் உங்களிடம் எப்படி நடந்துக் கொண்டான்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் நல்ல விதமாக நடந்துக் கொண்டான். இருந்த போதிலும் நான் சுவனத்த விட்டு தடுக்கப்பட்டுள்ளேன்.
மேலும் ஒரு சமயம் நான் நாற்பது முறை மரக்காலை கொண்டு தானியங்களை அளந்தேன்.
 
அந்த மரக்காலிருந்து என் என் மீது தூசி வந்துக் கொண்டேயிருக்கிறதுஎன்று கூறினார்.

(
அதற்கு காரணம் தாணியங்களை அளக்கும்போது அதிலே இருக்கும் தூசிகளும், பொடி மண்ணும் மரக்காலில் ஒட்டிக் கொள்ளும். ஒவ்வொரு முறையும் மரக்காலை துடைத்து சுத்தம் செய்யாமல் தொடர்ந்து அளக்கும் போது தாணியத்தின் அளவு கொஞ்சம் குறைந்து விடுகிறது. ஆகயால் அதிலும் பேணுதல் அவசியம்)

பேணுதலுக்கு கிடைத்த பரிசு

رئى سفيان الثوري في المنام‘وله جناحان يطير بهما في الجنة من شجرة إلى شجرة.
فقيل له بم نلت هذا؟  فقال بالورع.
(الكتاب:  رسلة القشيرية صفحة:215)

சுஃப்யானுஸ் ஸவ்ரீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கனவிலே காணப்பட்டார்கள். அவர்களுக்கு இரு இறக்கைகள் இருந்தன. அவற்றின் மூலம் ஒரு மரத்திலிகுந்து மற்றொரு மரத்திற்கு பறந்து சென்றுக் கொண்டிருந்தார்கள்.

அன்னாரிடம் நீங்கள் எப்படி இந்த அந்தஸ்தை அடைந்தீர்கள்?” என்று வினவப்பட்டது.

அதற்கு சுஃப்யானுஸ்  ஸவ்ரீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பேணுதலைக் கொண்டு அடைந்தேன்என்றார்கள்.




                                               
இதுவும் லஞ்சம் தான்

عن الشعبي قال:  كان رجل يهدي لعمر بن الخطاب ( كل)  عام فخد جزور  فخاصم إليه رجلا فقال:  يا أمير المؤمنين اقض بيننا قضاء فصلا  كما يفصل الرجل من سائر الجزور.  قال:  فقضي عليه عمر   . ثم كتب إلي عماله إن الهدايا هي الرشا.
(موسوعة ابن ابي الدنيا الجزء الاول صفحة -٢٢٠)

ஹதீஸ் கலை வல்லுனர் ஷுஃபீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்  :
ஒரு மனிதர் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஒட்டகத்தின் தொடை கறியை அன்பளிப்பு செய்பவராக இருந்தார்.

அந்த மனிதர்
(
ஒரு சமயம்) உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் ஒரு மனிதர் மீது வழக்குதொடுத்தார். அப்போது(தான் கொடுத்த அன்பளிப்பை நினைவூட்டும் விதமாக)  " கலீபா அவர்களே ஒட்டகைகளிருந்து காலை (தொடை கறியை) பிரித்தெடுப்பது போன்று எங்களுக்கிடையே தீர்ப்பளியுங்கள் என்று கூறினார்.

ஷுஃபீ
 (
ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:
"
உமர் ( ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அந்த மனிதருக்கு எதிராக தீர்ப்பளித்தார்கள்".

பிறகு தன்னுடைய அரசு  அதிகாரிகளுக்கு "நிச்சயமாக (உங்களுக்கு வழங்கப்படும்) அன்பளிப்புகள் அனைத்தும் லஞ்சம் தான்" என்று கடிதம் எழுதினார்கள்.
....................................................

பேணுதலின் சிகரம்

إسماعيل بن محمد بن سعد بن أبي وقاص - رضي الله عنه - قال: قدم على عمر - رضي الله عنه - مسك وعنبر من البحرين فقال عمر: والله لوددت أني وجدت امرأة حسنة الوزن تَزِنُ لي هذا الطيب حتى أقسمه بين المسلمين، فقالت له امرأته عاتكة بنت زيد بن عمرو بن نفيل: أنا جيدة الوزن فهلمَّ أزِن لك، قال: لا، قالت: لِمَ؟ قال: - إني أخشى أن تأخذيه فتجعليه هكذا وأدخل أصابعه في صدغيه وتمسحي به عنقك، فأصيب فضلا على المسلمين (الكتاب:  الهد صفحة - ١٤٨)

இஸ்மாயீல் பின் முஹம்மது (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் :

உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு பஹ்ரைனிலிருந்து கஸ்தூரியும் ,அம்பர் என்ற வாசனை திரவியமும் வந்தது.

 
அப்போது உமர் (ரலியல்லாஹு அன்ஹு) "அல்லாஹ் மீது ஆணையாக எனக்கு இந்த நறுமண  பொருளை அழகியமுறையில் நிறுத்து தரும் ஒரு பெண்ணை நான் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். பிறகு முஸ்லிம்களுக்கு நான் அதனை பங்கீடு செய்வேன்" என்று கூறினார்கள்.

 
அதுசமயம் அவர்களின் மனைவி ஆதிக்கா பின்த் ஜைது (ரலியல்லாஹு அன்ஹா) "நான் நன்றாக நிறுப்பேன். என்னிடம் தாருங்கள் நான் உங்களுக்கு நிறுத்து தருகிறேன் என்று கூறினார்கள்.

 
உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வேண்டாம் என்று கூறினார்கள்.

ஆத்திக்கா (ரலியல்லாஹு அன்ஹு ) ஏன் என்று வினவினார்கள்.

அதற்கு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) "நிச்சயமாக நான் "நீ அதை எடுத்து இப்படி செய்துவிடுவாயோ அதாவது உமர் (ரலியல்லாஹு அன்ஹு) தன் விரல்களை தன்னுடைய இரு நெற்றி பொட்டில் (முடியில்) நுழைத்து(இப்படி) உன் கழுத்தில் தடவிக்கொள்வாய். அதனால் மற்ற முஸ்லிம்களை விட அதிகமாக (என்பங்கில்) நான் பெற்றுக்கொண்டதாக ஆகிவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள்.
...................................................

உலக வரலாற்றில் அதிசய ஜானாதிபதி

وعن قتادة رضي الله عنه أن عمر بن الخطاب رضي الله عنه أبطأ عن الناس يوم الجمعة، قال: ثم خرج فاعتذر إليهم في احتباسه وقال: إنما حبسني غسل ثوبي هذا، كان يُغسل ولم يكن لي ثوب غيره)
(الكتاب:  الزهد للامام احمد صفحة -١٥٤)

கதாதா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்:

உமர் (ரலியல்லாஹு அன்ஹு) ஜும்ஆ தினத்தன்று மக்களிடேயே  (தொழுகைக்காக) வருவதற்கு  தாமதித்தார்கள். பிறகு வெளியே வந்து தான் வராததிற்கான காரணத்தை (பின் வருமாறு) கூறினார்கள் :
"
என் ஆடையை  துவைத்தது என்னை தடுத்து விட்டது. அந்த ஆடையும் துவைக்கப்பட வேண்டியதாய் இருந்தது.
எனக்கு இதைத் தவிர வேறு ஆடையும் இல்லை ".